சிங்கப்பூர் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு இதுதான் ஒரே வழி; நிதியமைச்சர் திரு வோங்.!

Singapore reopen borders
Pic: MCI's YouTube channel

உலக நாடுகளுடன் அதிக வணிக தொடர்பை கொண்டுள்ள சிங்கப்பூருக்கு அதன் எல்லைகளை மீண்டும் திறப்பது முக்கியமான அம்சம் என நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர், தடுப்பூசி போடும் திட்டத்தை முதலில் விரைவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பது நாட்டின் பொருளியல் மீட்சிக்கு அவசியம் என்றாலும், அவசரப்பட்டு எல்லையை மீண்டும் திறந்நதால் மேலும் ஒரு கிருமித்தொற்று பரவல் சூழலுக்கு வழியமைத்து விடலாம் என அவர் கூறியுள்ளார்.

எனவே, தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என திரு வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் மீண்டும் உலக நாடுகளுடன் படிப்படியாக இணைவதற்கு தடுப்பூசிகள் கைகொடுக்கும் என்றும், அடுத்த ஓரிரு மாதங்களில் சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை மிக உயர்வான அளவை எட்டக்கூடும் என திரு வோங் தெரிவித்துள்ளார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி கத்திக் கூச்சலிட்ட இளைஞர்… அபராதம், வாகனம் ஓட்டத் தடை விதித்த நீதிமன்றம்!