“சிங்கப்பூர் ஹாக்கி அணியை முன்னேற்றுவேன்” – புதிய பயிற்சியாளர் விஜ­யன்

Singapore hockey coach vijayan
(Photo: Singapore Hockey)

சிங்கப்பூர் ஆண்கள் பிரிவு ஹாக்கி அணியை தாம் வெற்றிகரமாக வழிநடத்துவேன் என்று புதிய பயிற்சியாளர் திரு கிருஷ்ணன் விஜயன் “செய்தி”-யிடம் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த 2 ஆண்டு கால பொறுப்பில், முக்கியமான தொடர்களில் வெற்றிபெற பாடுபடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கும் விடுதி அறையில் தங்களை பூட்டிவைத்ததாக வெளிநாட்டு ஊழியர் வழக்கு தொடுப்பு!

தரவரிசை பட்டியலில் தற்போது சிங்கப்பூர் 36-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அந்த அணி முன்னேற பாடுபடுவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான ஆசி­யப் போட்­டிக்கு­ தகுதி அடைவது, இந்த ஆண்டின் ஆசிய ஹாக்கி சம்­மேளன கிண்ணத்தை வெல்வது போன்ற இலக்குகளும் அவருக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஹாக்கி அணியின் தலை­மை பொறுப்பை ஏற்­கும் முதல் சிங்கப்பூரர் இவர் ஆவார்.

அவரின் 2 மகன்களும் சிங்கப்பூர் ஹாக்கி அணியில் நட்சத்திர வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Seithi MediaCorp

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை மானபங்கம் செய்ததாக இளைஞர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…