சிங்கப்பூரில் முதல் முறையாக கோவிட்-19 மாத்திரைக்கு அனுமதி – இவர்களுக்கெல்லாம் முன்னுரிமை!

Pic: Handout via Reuters

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிக்கும் வகையில், ஃபைசர் நிறுவனத்தின் பேக்ஸ்லோவிட் என்னும் மாத்திரையை பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) அனுமதி அளித்துள்ளது.

கடுமையான நோய்த்தொற்று அபாயத்தில் உள்ளவர்களுக்கு இந்த பேக்ஸ்லோவிட் மாத்திரை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. மிதமான கோவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு, பின்னர் கடுமையான நோயாக மாறக்கூடிய அபாயத்தில் உள்ள பெரியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த மாத்திரை பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட துஷீந்தர் சேகரனுக்கு சிறை, பிரம்படி – கார்த்திக் வழக்கு நிலுவை!

பேக்ஸ்லோவிட் மாத்திரையை ஐந்து நாட்களுக்கு, தினமும் 2 முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கிருமித்தொற்று அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களுக்குள் கூடிய விரைவில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதல் முறையாக கோவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக செயல்படும் வகையில், பேக்ஸ்லோவிட் மாத்திரைக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதையும், மரணத்தை குறைப்பதும் இதன் குறிக்கோள் என சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நிர்மட்ரெல்விர் மற்றும் ரிட்டொனவிர் எனும் இரண்டு மருந்துகளையும் கலந்து இந்த பேக்ஸ்லோவிட் மாத்திரை தயாரிக்கப்படுகிறது. மருந்துகள் ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை பெற்று சுகாதார அறிவியல் ஆணையம் இந்த மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், கிருமித்தொற்று பரவல் சிறப்பு அனுமதி நடைமுறையின் கீழ், பேக்ஸ்லோவிட் மாத்திரைக்கு கடந்த மாதம் 31ம் தேதி இடைக்கால அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக பின்தொடர்ந்து… லிப்டில் வைத்து பெண்ணிடம் தவறாக நடந்த ஆடவருக்கு சிறை