சிங்கப்பூரில் இருந்து இந்தியா… “வாரம் 5 விமான சேவை” – குறைந்த கட்டணம் சிறந்த சேவை!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் நகருக்கு வாரத்திற்கு ஐந்து விமானங்களை Scoot ஏர்லைன்ஸ் இயக்குகிறது.

மார்ச் 27 முதல் Scoot விமானங்கள் இயக்கப்படுவதாக விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலைய இயக்குநர் கே சீனிவாச ராவ் தெரிவித்தார்.

“நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ”… சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியருக்கு, சிங்கப்பூரருக்கும் கடும் வாக்குவாதம்!

வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் சேவைகள் இருக்காது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற 5 நாட்கள் விமான சேவை இருக்கும்.

ஏற்கனவே, சர்வதேச விமான சேவைகள் மே 27 முதல் முழு திறனுடன் செயல்படும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

வந்தே பாரத் மிஷன் மற்றும் ஏர் பப்பில் முறையில் கடந்த டிசம்பர் 29 முதல் சிங்கப்பூர் வாரத்தில் ஒரு விமானத்தை இயக்கியது, பின்னர் அது வாரத்திற்கு மூன்று விமானங்களாக நீட்டிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

கோவிட்-19 நடவடிக்கை தளர்வு: “பீர் எடு கொண்டாடு” என இலவச பீர் வழங்கும் Tiger Beer!