இந்தியா- சிங்கப்பூர் கடற்படைக் கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!

Photo: Indian Navy Official Twitter Page

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாட்டு கடற்படையினர் (Singapore-India Maritime Bilateral Exercise) இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், 29-வது இந்திய- சிங்கப்பூர் கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில், அக்டோபர் 26- ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டங்களாக இரு நாட்டு கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இந்தோனேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டினம் துறைமுகப் பகுதியிலும், வங்காள விரிகுடா கடற்பகுதியில் அக்டோபர் 28- ஆம் தேதி முதல் அக்டோபர் 30- ஆம் தேதி வரையும் வெற்றிகரமாகக் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

சிங்கப்பூர் நாட்டின் கடற்படையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஸ்டால்வார்ட் (RSS Stalwart) என்ற போர்க்கப்பலும், ஆர்எஸ்எஸ் விஜிலென்ஸ் (RSS Vigilance) என்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கப்பலும், இந்த கூட்டுப் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, கடந்த அக்டோபர் 25 – ஆம் தேதி விசாகப்பட்டினத்திற்கு வந்தடைந்தது.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டிக்கெட் முன்பதிவு!

இந்திய- சிங்கப்பூர் கடற்படையின் கூட்டுப் பயிற்சிக்கு ‘சிம்பெக்ஸ்- 2022’ (‘Simbex’ – 2022) என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.