சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்… உயிர்வாழ போராடும் பிள்ளை, “ஒரு ஊசி ரூ.18 கோடி” – உதவிக்கு ஆளில்லாமல் கலங்கி நிற்கும் குடும்பம்

singapore-indian-worker-struggling-to-save-her-10-month-baby

சிங்கப்பூரில் வேலைபார்த்து வரும் தமிழக ஊழியரின் குழந்தை மரபணு குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு உயிர்வாழ போராடி வருகிறது.

திருச்சி பகுதியை சேர்ந்த 33 வயதான ஊழியர் தினேஷ்குமார், இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ருத்ரபிரியா (22) என்ற மனைவியும், இனியா என்ற 2 வயது குழந்தையும் மற்றும் தன்ஷி என்ற 10 மாத குழந்தையும் உள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள இனி முன்பதிவு தேவையில்லை – முழு விபரம்

கடந்த பிப்ரவரி மாதம் பிறந்த தன்ஷிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இதனை அடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அதனை அடுத்து தன்ஷி ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி என்னும் முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் (Spinal Muscular Atrophy) பாதிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இதற்கான மருந்து இல்லாத நிலையில் பெங்களூரு கொண்டு சென்றுள்ளார் அவரின் தாய். பரிசோதனைக்கு ரூ.20 ஆயிரம், சுவாசிப்பு இயந்திரம் ரூ. 53 ஆயிரம் என செலவு தொடங்கியது.

ஒரு முறை சென்று வந்தால் 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அதோடு இது முடியாது என்பது தான் வருத்தமான செய்தி.

இந்த நோயை குணப்படுத்த தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே ரூ.18 கோடி வேண்டும் என சொல்லப்படுகிறது.

அதோடு வாழ்நாள் முழுவதும் மருந்து கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற சோகமான குறிப்பும் வெளியாகியுள்ளது.

2 அறுவை சிகிச்சைகள், அதற்கு பிறகு 100மில்லி மருந்து – ரூ. 6 லட்சம், 8 மாதம் வரை மருத்துவமனையில் குழந்தையை வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு பணமில்லாத காரணத்தால் தன் குழந்தையை தாய் வீட்டிலேயே கவனித்து வருகிறார்.

இந்நிலையில், கணவர் வேலைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார் என்றும், என் குழந்தையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் திரு. ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

என் உயிரை எடுத்துக்கொண்டு என் குழந்தையை வாழவை கடவுளே!!! என்று தாய் கதறும்போது நம் கண்களில் கண்ணீர் சொல்லாமல் வழிகிறது.

சில ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: 2023 முதல் அமல் – லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா செக் பண்ணுங்க ?