தடுப்பூசி போட்டுக்கொள்ள இனி முன்பதிவு தேவையில்லை – முழு விபரம்

walk-in-covid-19-vaccination-centres
Ong Ye Kung/FB.

சிங்கப்பூரில் எந்தவொரு தடுப்பூசி நிலையத்துக்கும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள இனி முன்பதிவு தேவையில்லை.

இன்று ஜனவரி 4 முதல் இது நடப்புக்கு வந்துள்ளது, மேலும் திங்கள் முதல் சனி வரை நீங்கள் உங்களுக்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

சில ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: 2023 முதல் அமல் – லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா செக் பண்ணுங்க ?

வரும் ஜன. 16 முதல், ஆறு மாதம் முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகள் ஃபைசர்-பயோஎன்டெக்/காமிர்னாட்டி தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசிக்கு தகுதி உடையோர் நேரடியாக சென்று தங்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக மக்கள் வரும் நாட்களில், குறிப்பாக சனிக்கிழமை நீண்ட காத்திருப்பு நேரத்தை எதிர்பார்க்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி மரணித்து வரும் நிலையில், இது தேவையா?”