சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கச் செயின்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கச் செயின்கள் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானத்தில் பயணிக்க கட்டணம் இவ்வளவு தானா?

அந்த வகையில், கடந்த டிசம்பர் 09- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் (6E 1008) விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய சோதனையில், விமானத்தில் பயணிகள் அமரும் இருக்கைக்கு பின்புறம் தங்கச் செயின்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமார் 24 கேரட் 500 கிராம் தங்கச் செயின் இரண்டைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதனை யார் கொண்டு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“86 வயது முதியவரைக் காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் செயின்களின் மதிப்பு ரூபாய் 31.18 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை திருச்சி மண்டல சுங்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.