மறுதொற்று காரணமாக சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதியில் அடுத்த அலை ஏற்படக்கூடும்!

சிங்கப்பூர் மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த பெரிய அலை மறுதொற்றால் ஏற்படலாம் என்று நேற்று (ஆகஸ்ட் 24) சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் கூறினார்.

பேருந்தை ஓட்டும்போது தூங்கிய ஓட்டுநர்… சிமென்ட் கற்களில் மோதி விபத்தில் சிக்கிய பேருந்து – ஓட்டுனருக்கு சிறை

இதன் விளைவாக, அடுத்த கிருமித்தொற்று அலையை கருத்தில்கொண்டு, சிங்கப்பூர் மறுதொற்று பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது என்றார் அவர்.

“இதுவரை தொற்று பாதிப்புக்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் குறைவாக உள்ளது என்பதை தரவுகள் காட்டுவதாக ஓங் கூறினார்.

“இருப்பினும், மொத்த தினசரி பாதிப்புகளின் கணக்கு விகிதத்தில் மறுதொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் இப்போது 5.5 சதவீத நோயாளிகளுக்கு மீண்டும் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன என்பதையும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் இதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் பூனையை சுற்றுவளைத்த பெரிய மலைப்பாம்பு – நெரித்து கொன்ற காட்சி வைரல்