வெளிநாட்டினர் வாழ, வேலை செய்ய சிறந்த நகரம் சிங்கப்பூர்… ஆசியாவிலேயே முதலிடம்

Migrant workers vital to Singapore economy
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

ஆசியாவிலேயே வெளிநாட்டினர் வாழ சிறந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தேர்வாகியுள்ளது.

உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெர்சரின் 2023 ஆம் ஆண்டின் வெளிநாட்டினருக்கான வாழ்க்கைத் தரம் கணக்கெடுப்பில் இந்த முடிவுகள் வெளியானது.

“நீங்க இந்தியர்… நீங்க மிக மோச**வர்கள்” என்று கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு அபராதம்

வெளிநாட்டினர் குடும்பத்தோடு வசிக்கவும், வேலை செய்யவும் சிறந்த நகரமாக சிங்கப்பூர் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்த சிங்கப்பூர், உலக அளவில் 29 வது இடத்தில் உள்ளது. அதே இடத்தை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டும் பிடித்துள்ளது.

இந்த ஆய்வில் இடம்பிடித்த 241 இடங்கள் அடங்கிய பட்டியலில் ஹாங்காங் 77வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

அரசியல் மற்றும் சமூக சூழல், சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட 39 அடிப்படை சிறப்புகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உலகளவில் சுமார் 450க்கும் மேற்பட்ட நகரங்களில் வாழ்க்கை அம்சங்களை மெர்சர் ஆய்வு செய்தது.

இந்த பட்டியல் கடைசியாக 2019 ஆம் ஆண்டின் தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் வெளியிடப்பட்டது.

அந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளிலும் ஆசியாவிலேயே முதலிடத்தில் சிங்கப்பூர் இருந்து வருகிறது.

மேலும், தமிழர்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மத்திய கிழக்கு நகரங்களில் துபாய் முதலிடத்தில் உள்ளது, உலகளவில் அது 79வது இடத்தில் உள்ளது.

சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட முதல் 5 நகரங்கள்

1. வியன்னா, ஆஸ்திரியா

2. சூரிச், சுவிட்சர்லாந்து

3. ஆக்லாந்து, நியூசிலாந்து

4. கோபன்ஹேகன், டென்மார்க்

5. ஜெனீவா, சுவிட்சர்லாந்து

லிட்டில் இந்தியாவில் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற 33 வயது ஆடவர்.. 10 மணி நேரத்துக்குள் கைது செய்த போலீஸ்