“சிங்கப்பூரில் அமோக வேலை” – ஏமாந்து நிர்கதியாய் நின்ற தமிழ்நாட்டு ஊழியர்

singapore job scam tamilnadu

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழ்நாட்டு ஊழியரிடம் 42.40 லட்ச ரூபாய் வாங்கி கொண்டு மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்து அமைந்துள்ள கோவிலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 59 வயதான சந்திரராஜ். இவர் தனது மகனுக்கு வேலை தேடி கொண்டிருக்க சிங்கப்பூரில் அமோக வேலை என விளம்பர ம் வந்துள்ளது.

அதில் தொடர்பு கொண்டபோது 31 வயதான பாலமுருகன் அறிமுகம் ஆகியுள்ளார், “ஒன்னும் கவலைப்படாதிங்க, சிங்கப்பூரில் வேலை இருக்கு” என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார் பாலமுருகன்.

சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்

நல்ல வேலை என்பதால் நல்ல செலவாகும் என சொல்லி சுமார் 42.40 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார் பாலமுருகன்.

வேலை என்னாச்சு என கேக்கும்போதெல்லாம் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்த பாலமுருகன், ஒரு கட்டத்தில் வேலைக்கான போலி ஆவணங்களை கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனை அடுத்து, ஏமாற்றம் அடைந்த சந்திரராஜ் சென்னை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார்.

அதன் பின்னர் விசாரணையை தொடங்கிய போலீசார், பாலமுருகன் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்ததை கண்டறிந்தனர்.

இந்நிலையில் அவரை மடக்கி பிடித்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

பாலமுருகன் மீது இதே போல மோசடி குற்றச்சாட்டுகள் முன்னர் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பாஸ்போர்ட்டை பரிசீலிக்க வரிசையில் நின்ற வெளிநாட்டு ஆடவர்… சுருண்டு விழுந்து திடீர் மரணம்