வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தந்த துறைகளில் வேலை அதிகரித்துள்ளது – தெரிந்துகொள்ளுங்கள்

Singapore jobs expanded non singaporeans
Photo: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆட்குறைப்புகள் அதிகரித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய காலாண்டில் குறைவாக இருந்த ஆட்குறைப்பு மூன்றாம் காலாண்டில் அதிகரித்ததுள்ளது.

பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்

இருப்பினும், வேலைச் சந்தை விரிவடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாம் பலவீனமானதாக தான் இருக்கும் என்ற கண்ணோட்டம் இருந்தபோதிலும் வேலைச் சந்தை விரிவடைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்தம் 4,100 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய காலாண்டில் 3,200 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்ட முன்னோடி வேலைச் சந்தை மதிப்பீடுகளின்படி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து எட்டாவது காலாண்டாக மொத்த வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன, சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் அல்லாதோர் இருவருக்கும் அந்த விகிதம் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் அல்லாதோருக்கு, கட்டுமானம், சில்லறை வணிகம், உணவு-பான சேவைகள் மற்றும் நிர்வாக சேவைகள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்