சிங்கப்பூரில் குறையும் வேலைவாய்ப்பு.. ஊழியர்கள் வேலையில் இருந்துகூட நீக்கப்படலாம்

our-migrants-cook-book-recipe
(PHOTO: Unsplash and Getty)

சிங்கப்பூரில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த மே மாத நிலவரப்படி, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை சென்ற இருவருக்கு செக்.. தீவிர விசாரணை

நேற்று ஜூலை 5 புதன்கிழமை வெளியான மனிதவள அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அதனை தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 1.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது மே மாதத்தில், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 64,700 பேர் வேலையில்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

அவர்களில் 56,900 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் என்ற தகவலையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் காரணத்தால், வரும் மாதங்களில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே போல, உலக அளவில் குறையும் தேவைகள் காரணமாகவும் பல துறைகளில் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் 1,200 வெளிநாட்டினருக்கு PR – Permanent Residence அந்தஸ்து…