சிங்கப்பூரின் இளம் கால்பந்து வீரர் காலமானார்!

Photo: Singapore Khalsa Association Official Facebook Page

“சிங்கப்பூர் கால்பந்து லீக்கின் முதல் பிரிவு 1-ல் (Singapore Football League Division 1) விளையாடுவதற்காக, சிங்கப்பூரின் இளம் கால்பந்து வீரரும், சிங்கப்பூர் கால்ஸா சங்கத்தின் உறுப்பினருமான கார்த்திக் ராஜ் மணிமாறன் (வயது 25) தனது அணியுடன், மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு ஏப்ரல் 1- ஆம் தேதி அன்று கார்த்திக் ராஜ் மணிமாறனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோலாலம்பூரில் உள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பிரதமர் லீ சியன் லூங்!

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2- ஆம் தேதி அன்று ஏர் ஆம்புலன்ஸ் (Air Ambulance) மூலம் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூரில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கார்த்திக் ராஜ் மணிமாறன் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஏப்ரல் 05) இரவு காலமானார்.

கடந்த 2022- ஆம் ஆண்டு சிங்கப்பூர் கால்ஸா சங்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட கார்த்திக் ராஜ் மணிமாறன், அந்த ஆண்டில் நடந்த கால்பந்து போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியது. சிங்கப்பூர் பிரீமியர் லீக் கால்பந்திலும் கலந்துக் கொண்டார்.

சிங்கப்பூரில் குடியுரிமை பெற இதல்லாம் தேவை.. ஆங்கிலம் முக்கியமா?

சக வீரர்களின் பாராட்டுக்குரியவர். அற்புதமான நபரின் இழப்பை வார்த்தகைகளால் விவரிக்க முடியாது. அவர் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அன்பான இளைஞராக இருந்தார். அவர் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளார். எனவே, அவரது குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு சிங்கப்பூர் கால்ஸா சங்கம் (Singapore Khalsa Association) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.