நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 3 பேர் மரணம்

நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 3 பேர் மரணம்
NUS terminates foreign student from exchange programme for breaching leave of absence (Photo : CNA)

நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக நியூசிலாந்து போலீசார் நேற்று (மே 9) தெரிவித்தனர்.

பலியானவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) இளங்கலை பட்டதாரி மாணவர்கள் என்பது சோகமான செய்தி.

அவர்கள்: ஷெர்வின் சோங் ஷி யுன், சின்யூ யாங் மற்றும் ஜியா ஜுன் வின்சென்ட் லிம்.

சோங் மற்றும் யாங் இருவருக்கும் 21 வயது என்றும், லிம்க்கு 24 வயது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற ஊழியர் கைது – வழக்குப்பதிவு

Christchurchசில் இருந்து தென்மேற்கே சுமார் 140 கிமீ தொலைவில் உள்ள மாநில நெடுஞ்சாலை 79 மற்றும் தே மோனா சாலை சந்திப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 17 அன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது.

இது குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. வாடகைக்கு வேன் எடுத்துச்சென்றதாகவும், சாலை தடுகளில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அவர்களின் மரணத்திற்கு நியூசிலாந்து போலீசார் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெயில் காலம் வந்துருச்சி.. வெப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை – MOM வெளியிட்ட அறிக்கையால் மகிழ்ச்சி