“எல்லா நாட்டிலும் பிரச்சனைகள் இருக்கின்றன”- அமைச்சர் கா.சண்முகம்!

File Photo

சிங்கப்பூர் சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார்.

வருமானம் இன்றி தவித்த “லிட்டில் இந்தியா”…. விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் வருகை செய்தியால் மகிழ்ச்சி

சமூக ஊடகத்தின் தாக்கம் இப்போது நம்ம வாழ்க்கையில் அதிகமாகவே இருக்கிறது. இப்ப இனம் சார்ந்த பிரச்சனைகள் வரும் போது முன்பு அமைதியாக முடிஞ்சிடும். இப்ப வந்து சமூக ஊடகத்துல அதிகமாகப் பகிர்றாங்க. பல பேர் பல கருத்துக்களைச் சொல்றாங்க. நமது ஆணிவேரே இன நல்லிணக்கம். அது வந்து குலையாம இருக்குறதுக்கு இந்த ஒரு காலகட்டத்துல நாம் என்னெல்லாம் செய்ய வேண்டும்?

“ஒவ்வொரு வரும் அவர்களுக்கு என்னென்ன, அவர்களுடைய சொந்த எக்ஸ்பிரியன்ஸ் பத்திப் பேசுறாங்க சமூக இணையங்கள, எப்போவுமே கடந்து வந்திருக்கிற சம்பவங்கள் தான், இப்போது இருக்கிற இடம் முன்பு இருந்ததை விட முன்னேற்றமான் இடம். ஆனால், அதேநேரத்தில் மக்களின் எக்ஸ்பிரியன்ஸை நாம் நிராகரிக்க முடியாது. அது உண்மை, அவர்களுடைய எக்ஸ்பிரியன்ஸ். என்னிடமும் பலர் வந்து பேசியிருக்கிறார்கள். அவர்களின் சொந்த எக்ஸ்பிரியன்ஸ் பத்தி சொல்லியிருக்கிறார்கள். நான் எப்போதும் என்ன சொல்வதென்றால், எல்லா நாட்டிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. சிங்கப்பூரில் மற்ற நாடுகளைப் பார்க்கும் போது, பிரச்சனைகள் குறைவு.

கொரோனாவால் 62 வயது முதியவர் உயிரிழப்பு!

நமது அடிப்படை கோட்பாடுகள் என்ன? எல்லோருக்கும் சம வாய்ப்புகள் உள்ளது; எல்லோருக்கும் முன்னேற வாய்ப்புகள் உண்டு; எல்லோருக்கும் நல்ல பள்ளிகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது; எல்லோருக்கும் வீடுகள் வாங்க வாய்ப்புகள் உண்டு; எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள் இருக்கும். தொடர்ந்து அரசாங்கம், அதை நிலை நிறுத்தும்; நம்பிக்கையோடு செயல்படுங்கள். அந்த வகையில் பார்க்கும் போது, இது அடுத்த கட்டத்தின் சமய நல்லிணக்கம், இணைய நல்லிணக்கத்தை இன்னும் மேற்படுத்துவோம். உங்களுக்கு உங்களின் நிலை இன்னும் மேம்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதற்கு தொடர்ந்து பாடுபடுவோம்” என்று அமைச்சர் கா.சண்முகம் கூறினார்.