பஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல்

Singapore leaders express condolences to Bahrain
Singapore leaders express condolences to Bahrain (Photo: Mazen Mahdi/AFP)

உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபாவின் மறைவுக்கு சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப் மற்றும் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் பஹ்ரைன் தலைவர்களுக்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளனர்.

ஆசியான் உள்ளிட்ட நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் லீ

இளவரசர் கலீஃபா (வயது 84) அமெரிக்க மருத்துவமனையில் கடத்த புதன்கிழமை (நவம்பர் 11) காலமானார்.

நவம்பர் 13 தேதியிட்ட அந்த கடிதத்தில், இளவரசர் கலீஃபா காலமானதை அறிந்து வருத்தப்படுவதாக அதிபர் ஹலிமா யாகோப் குறிப்பிட்டுள்ளார்.

பஹ்ரைனுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உறுதியான தலைவர் என்று அதிபர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் பஹ்ரைனையும் அதன் பொருளாதாரத்தையும் நவீனமயமாக்குவதில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தார் என்றார்.

“அவர் சிங்கப்பூரின் நல்ல நண்பராக இருந்தார், சிங்கப்பூரின் தலைவர்கள் பலர் பஹ்ரைன் செல்லும் போது அன்புடன் வரவேற்றார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீக்காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

சிங்கப்பூர் பிரதமர் திரு லீ பட்டத்து இளவரசருக்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் தோ பாயோவில் பேருந்தின் கீழே சிக்கிய ஆடவர்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…