பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: அதிபர் ஹலிமா, பிரதமர் லீ இரங்கல்

Singapore leaders send condolences after death of Queen Elizabeth II
AFP

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை (செப். 9) இரங்கல் கடிதங்களை அந்நாட்டு தலைவர்களுக்கு அனுப்பியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Work permit இல்லை, பொழுதுபோக்கு சேவை: சிங்கப்பூரில் ஆண், பெண் உட்பட 31 பேர் கைது

அதிபர் ஹலிமா யாக்கோப் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பு, எனக்கும் எனது கணவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

பிரதமர் லீ, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “உங்கள் தாயார், ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்” என்றார்.

“எங்களுக்கு லாபம் முக்கியம்”… ஊழியர்களுக்கு வேலை இல்லை – ஆட்குறைப்பு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்