“சிங்கப்பூர்-மலேசியா” நில எல்லைகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறந்தாச்சு: பயணிகள் பெரும் மகிழ்ச்சி!

Canva

முன்னர் அறிவிக்கப்பட்டதை போல, சிங்கப்பூர்-மலேசியா இடையேயான நில எல்லைகள் முழுவதும் சிறப்பாக இன்று (1 ஏப்ரல்) திறக்கப்பட்டன.

அதாவது சிங்கப்பூர்-மலேசிய நில வழியான எல்லைகள் சுமார் 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது, மக்களிடையே பயண தடைகளாக அது அமைந்தது.

Breaking: வெளிநாட்டு ஊழியர்களுக்கான தளர்வுகள்: எங்கே மாஸ்க் போடணும், போடக்கூடாது, ART, குழு, மது வரம்பு உள்ளிட்ட அனைத்துக்கும் விடை – விரிவான பதிவு!

இந்நிலையில், அந்த எல்லைகள் முழுவதும் இன்று 1 ஏப்ரல் முதல் திறக்கப்பட்டுள்ளன, இதனால் இருநாட்டு பயணிகளும் பெரும் மகிழ்ச்சியில் எல்லைகளை கடந்து சென்றனர்.

நள்ளிரவில் அது திறக்கப்படுவதற்கு முன்னர், எல்லைகளை கடக்க கார்கள், பைக்குகளில் உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் ஆரவாரத்துடன் காத்திருந்தனர்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டும் இதில் பயணிக்க முடியும். மேலும், அவர்களுக்கு கோவிட்-19 சோதனைகள் இல்லை.

குறிப்பாக, அனைத்து போக்குவரத்து முறைகளிலும் தனிமைப்படுத்தல் இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கலாம் என்பது தான் இதன் சிறப்பு.

அதே போல, இரு எல்லைகளுக்கு இடையே வாகனம் ஓட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான பயணிகளும் இதற்கு தகுதியானவர்கள்.

ART கருவி தேவைப்படுவோருக்கு குட் நியூஸ்: வாங்க ஆஃபர்’ல அள்ளிட்டு போங்க! – 4 நாட்களுக்கு மட்டுமே!