சிங்கப்பூர்-மலேசியா விரைவு ரயில் திட்டம்; இருநாட்டுப் பிரதமர்களும் கையெழுத்து..!

Singapore, Malaysia hold ceremony at Causeway to mark resumption of RTS Link project
Singapore, Malaysia hold ceremony at Causeway to mark resumption of RTS Link project (Photo: Gaya Chandramohan)

சிங்கப்பூர்-மலேசியா இடையிலான விரைவு ரயில் திட்டம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்படுவதைக் குறிக்கும் வகையில் ஜொகூர் இணைப்பு பாலத்தில் அதன் தொடர்பிலான விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்தி்ட்டனர் என்று சிங்கப்பூர் மற்றும் மலேசியா வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற தமிழர்..!

திரு முஹைதீன் கடந்த மார்ச் மாதம் பிரதமராக பதவி ஏற்றதை தொடர்ந்து இரு தலைவர்களும் நேரில் சந்தித்தது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும் இந்த நிகழ்வில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் (Ong Ye Kung) மற்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் (Wee Ka Siong) கலந்துகொண்டனர்.

இந்த இணைப்பு திட்டத்தை மீண்டும் தொடங்க தேவையான மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் 1.2 பில்லியன் வெள்ளி வரை செலவு ஆகலாம் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய மாற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் சேவை 2024ஆம் ஆண்டுக்கு பதிலாக 2026ஆம் ஆண்டிலிருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg