சுமார் 100,000 பேர் VTL வழியாக சிங்கப்பூர் வருகை.. டிக்கெட் விற்பனை 50% குறைக்கப்படும்

Changi Airport Facebook

தனிமைப்படுத்தல் இல்லா பயணத் திட்டத்தின்கீழ் மலேசியாவில் இருந்து சுமார் 100,000 பேர் சிங்கப்பூர் வந்துள்ளனர். இந்த திட்டம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது.

இதில், சுமார் 55,000 பேர் தரைவழி VTL ஏற்பாட்டின்கீழ் காஸ்வே வழியாக சிங்கப்பூர் நுழைந்துள்ளனர்.

சிங்கப்பூர் ஆற்றில் சடலமாக மிதந்த மலேசிய இளம்பெண்: மகளை கடைசியாக பார்க்க சிங்கப்பூர் வர முடியாமல் தவிக்கும் பெற்றோர்

மேலும், மலேசியாவில் இருந்து VTL விமான வழியாக சுமார் 44,000 பேர் சிங்கப்பூர் நுழைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) நிலவரப்படி, கடந்த டிசம்பர் 20 அன்று விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் சுமார் 43,000 VTL பயணிகள் வந்துள்ளனர் என்று வர்த்தகம், தொழில் அமைச்சகம் (MTI) தெரிவித்தது.

இந்த விரிவாக்கம் சிங்கப்பூர் குடிமக்கள் மலேசியாவிற்கும், மலேசிய குடிமக்கள் சிங்கப்பூருக்கு செல்ல வழிவகை செய்தது.

MTI கடந்த மாதம் அறிவித்தபடி, இன்று வெள்ளிக்கிழமை முதல் நில VTL பயணிகளின் அளவு மற்றும் டிக்கெட் விற்பனை 50 சதவிகிதம் தற்காலிகமாக குறைக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சிங்கப்பூரில் வேலையிடத்தில் தவறி விழுந்த ஊழியர் மரணம்!