சிங்கப்பூர்-மலேசியா இடையே நில வழி பயணம்: குடும்பங்களைப் பிரிந்து வாடும் ஊழியர்களுக்கு முன்னுரிமை!

(Photo: TODAY)

தனிமைப்படுத்தல் இல்லாமல், சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே நில எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படலாம், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே பயணம் செய்பவர்களுக்கு VTL திட்டத்தின் விவரங்களை விரைவில் இறுதி செய்யப்படும் என நம்புவதாக வர்த்தக, தொழில்துறை அமைச்சகம் (MTI) வியாழக்கிழமை (நவம்பர் 18) தெரிவித்துள்ளது.

குடியிருப்பில் இறந்து கிடந்த ஆடவர்: இறந்து சில நாட்களாகியிருக்கலாம் – காவல்துறை

“இரு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெரும்பாலானோர், பல மாதங்களாக தங்கள் குடும்பங்களைப் பிரிந்து உள்ளனர், மேலும் நில வழி எல்லைகளை மீண்டும் திறக்கும் சமயத்தில் அந்த ஊழியர்களும் அனுமதி முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பார்கள்.”

அதன் மூலம் ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைய முடியும் என்றும் MTI செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால், VTLக்கான தொடக்கத் தேதியை அவர் குறிப்பிடவில்லை.

சிங்கப்பூருக்கும் ஜொகருக்கும் இடையிலான நில வழி எல்லைகள் வரும் நவம்பர் 29ஆம் தேதி திறக்கப்படும் என்று மலேசியாவில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சகம் இவ்வாறு கூறியது.

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை விதிப்பு