கடல் உணவுகளின் தேவைகளை பூர்த்திசெய்ய பேரங்காடிகள் விரைவாக செயல்பட்டுள்ளது; அமைச்சர் கிரேஸ் ஃபூ.!

Singapore malls ensure seafoods
Pic: Grace Fu/FB

Century Square கடைத்தொகுதியில் உள்ள Prime மாலிற்கு நேற்று (24-07-2021) வருகை புரிந்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு சிங்கப்பூரர்கள் ஆதரவு அளிக்கும் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடல் உணவின் விநியோகம் சிங்கப்பூரில் நிலையாக இருப்பதாகவும், பேரங்காடிகள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய விரைவாக செயல்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

முகக்கவசம் அணிய தவறிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

வெவ்வேறு இடங்களில் இருந்து உணவுப் பொருட்களைப் பெற்று, வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு விநியோகிப்பதன் மூலம் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க பேரங்காடிகள் உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பதோடு, பல விதமான மீன் மற்றும் கடல் உணவுகளை வாங்குமாறும் பொதுமக்களை அமைச்சர் கிரேஸ் ஃபூ ஊக்குவித்தார்.

சிகரெட்டு துண்டை தூக்கி வீசியதால் ஏற்பட்ட தீ – இந்திய ஊழியருக்கு சிறை