“என்னங்க பெரிய சிப்ஸ்.., இத திண்ணு பாருங்க” – பூச்சி உணவுகளை சாப்பிட்டு வரும் சிங்கப்பூரர்

"என்னங்க பெரிய சிப்ஸ்.., இத திண்ணு பாருங்க" - பூச்சி உணவுகளை சாப்பிட்டு வரும் சிங்கப்பூரர்
Zhangxin Zheng and Foo Maosheng's IG

சிங்கப்பூரில் மனிதர்கள் சாப்பிடவும், கால்நடைத் தீவனத்துக்காவும் பூச்சிகள் மற்றும் பூச்சிப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதி வழங்கவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆராந்து வருகிறது.

அதாவது, வரும் காலத்தில் மிக விரைவில் சிங்கப்பூரர்கள் அத்தகைய பொருட்களை உள்ளூர் கடைகளில் இருந்து வாங்கி, எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற நிலை உருவாகும்.

சிங்கப்பூரிலுள்ள பலருக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தந்தாலும், ஒரு சிங்கப்பூரர் இந்த செய்தியை வரவேற்றுள்ளார்.

வெளிநாட்டு ஓட்டுனருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை

இந்த அனுமதி செய்தி அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், என்கிறார் ஃபூ மாஷெங் என்ற சிங்கப்பூரர்.

அட என்னடா இவர் மட்டும் இப்படி சொல்லுறாரே என்று பார்த்தால்.., ஃபூ 2015 முதல் தனது உணவில் பூச்சிகளை சேர்த்து சாப்பிட்டு வருகிறாராம்.

தாய்லாந்தில் இருந்து சில வறுத்த மூங்கில் புழுக்களை அவரின் சக ஊழியர் வாங்கி கொண்டு வந்து அவருக்கு கொடுத்துள்ளார், அதை சாப்பிட்டதில் இருந்து அவருக்கு சுவை நாக்கில் ஒட்டியதாக கூறியுள்ளார்.

தற்போது, ​​தாய்லாந்திலிருந்து வருடத்திற்கு ஒருமுறை பல்வேறு வகையான உண்ணக்கூடிய சிறு பூச்சிகளை வாங்கி வருகிறார் ஃபூ.

சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் போன்று பூச்சிகளை அவர் உண்டு வருவது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடு சிங்கப்பூர்: பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்