சிங்கப்பூரில் வன விலங்குகளுக்கு தனிப்பாலம் அமைத்தும் தொடரும் விபத்துகள்..!

Pic: Mandai Wildlife Group

சிங்கப்பூரில் வன விலங்குகள் பாதுகாப்பான முறையில் சென்றுவர ஏதுவாக மண்டாய் லேக் சாலையின் குறுக்கே வன விலங்குகளுக்கான தனிப்பாலம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. அந்தப் பாலம் திறக்கப்பட்டது முதல் அங்கு பறவைகள், பாலூட்டிகள் உள்பட கிட்டத்தட்ட 70 வனவிலங்கு இனங்கள் அதனை பயன்படுத்துவதாக மாண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்துள்ளது.

மண்டாய் லேக் சாலையின் குறுக்கே உள்ள பாலத்தில், பொருத்தப்பட்டுள்ள 140 மீட்டர் நீளமுள்ள கண்காணிப்பு கேமரா வழியாக காட்டுப்பன்றிகள், சம்பா மான்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை நன்கு அறிய முடிவதாக மாண்டாய் வனவிலங்குக் குழுமம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் முதல் முறையாக கோவிட்-19 மாத்திரைக்கு அனுமதி – இவர்களுக்கெல்லாம் முன்னுரிமை!

மண்டாய் லேக் சாலையில் ஏற்படும் போக்குவரத்து விபத்துகளிலிருந்து உள்ளூர் விலங்குகளைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட அந்தப் பாலம், போக்குவரத்து விபத்துகளில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்கவில்லை என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நடந்த ஓர் விபத்தில் அரிய விலங்கான சுண்டா எறும்புதின்னி (பங்கோலின்) பலியாகி அதன் உடல் மண்டாய் லேக் சாலையில் கண்டெடுக்கப்பட்டது. மண்டாய் லேக் சாலையில் கடந்த டிசம்பர் 2019 முதல் கூடுதல் விலங்குகள் பலியாகியுள்ளன. இந்த விபத்துகள் குறித்த விபரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறுவனம் மாண்டாய் வனவிலங்கு குழுமத்திடம் கேட்டுள்ளது.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?