அதிக குழந்தைகள் வேண்டும் என ஆசை… ஆனால் செலவு, மன அழுத்தம் அதிகம் என பின்வாங்கும் சிங்கப்பூரர்கள் – ஆய்வு

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

சிங்கப்பூரர்களிடையே திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தாலும் கூட, பல திருமணமான தம்பதிகள் தாங்கள் விரும்புவதை விடக் குறைவான குழந்தைகளையே பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் தொகை மற்றும் திறமைப் பிரிவு (NTPD) இன்று (அக். 10) வெளியிட்ட ௨௦௨௧ம் ஆண்டு திருமணம் மற்றும் பெற்றோருக்கான கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியானது.

சிங்கப்பூரில் ஒரு குடும்பமாக உருவாகும்போது அதில் உள்ள எதிர்பார்ப்புக்கும் உண்மைக்கும் இடையே பொருந்தாத தன்மை நிறைய இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மூவரை கொடூரமாக தாக்கிய இருவர் – காப்பிக்கடையில் உதிரம் சொட்ட சொட்ட நடந்த சண்டை

கணக்கெடுக்கப்பட்ட திருமணமான தம்பதிகளில் 10ல் ஒன்பது பேர் (92 சதவீதம்) தாங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற விரும்பியதாகக் கூறினர்.

ஆனால் உண்மையில், அவர்களில் பாதி (51 சதவீதம் பேர்) தம்பதிகள் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுள்ளனர்.

அதிக குழந்தைகள் இல்லாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பொருளாதார செலவு என்றும் கூறப்பட்டுள்ளது. திருமணமான 64 சதவீதம் பேர் முதல் மூன்று காரணங்களில் பொருளாதார செலவையே ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் தேர்ந்தெடுத்த மற்ற இரண்டு காரணங்கள் என்னவென்றால், “சிங்கப்பூரில் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் மன அழுத்தம் வாய்ந்தது என்றும், “வேலை மற்றும் குடும்ப தேவைகளை நிர்வகிப்பது கடினம்” என்றும் கூறுகின்றனர்.

உயிருள்ள கோழி இறைச்சிக்கான ஏற்றுமதி தடையை நீக்குகிறது மலேசியா – கோழி பிரியர்கள் மகிழ்ச்சி