வாடிக்கையாளர்களின் நலனுக்காக கூடுதல் கட்டுப்பாடுகள்: McDonald’s நிறுவனம் அறிவிப்பு.!

Singapore McDonalds restrictions
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள பிரபல McDonald’s நிறுவனம் நாளை (ஜூலை 19) முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை அதன் உணவகங்களில் அதிகபட்சமாக இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று பரவல் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் காரணத்தால், McDonald’s நிறுவனம் அதன் தனிப்பட்ட கட்டுப்பாடுகளைத் அறிவித்துள்ளது.

புதிய கோவிட்-19 குழுமங்கள் எதிரொலி: அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – பிரதமர் லீ

சிங்கப்பூரில் பொதுவான கட்டுப்பாடுகளின்படி, முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அல்லது கிருமித்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவை வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ஐந்து பேர் வரை குழுவாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

McDonald’s நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சேவை வழங்கி வருவதால், ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க பொதுவான கட்டுப்பாடுகளைவிடக் கூடுதல் கட்டுப்பாடுகளை முன்வைத்திருப்பதாகத் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் இணையதளத்தின் மூலம் அவர்களுக்குப் பிடித்த McDonald’s உணவுப்பொருள்களைப் வாங்கலாம் என்றும், ஆர்டர் செய்யும் உணவுப்பொருள்களைப் அவர்கள் வீட்டிற்கு சென்று விநியோகம் செய்யும் சேவைகள் தொடரும் என்றும் McDonald’s நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருட்கள் இருந்த இடத்தில் அழுது கொண்டிருந்த கைக்குழந்தை..அதிகாரி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்.!