புதிய கோவிட்-19 குழுமங்கள் எதிரொலி: அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – பிரதமர் லீ

PM Lee urges everyone to get vaccinated
(Photos from MCI & Unsplash)

கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அனைத்து சிங்கப்பூரர்களையும் பிரதமர் லீ சியென் லூங் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வயதில் மூத்தவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்றுவந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சந்தைகளில் கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (ஜூலை 17) தெரிவித்தது.

KTV ஓய்வறைகள் மற்றும் ஜுராங் மீன் வர்த்தக துறைமுகத்தில் புதிய நோய்ப்பரவல் குழுமங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க மிக முக்கியமான வழி, நாம் அனைவரும் தடுப்பூசி போடுவதாகும் என்று திரு லீ கூறியுள்ளார்.

“சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்கவும், புதிய இயல்புநிலைக்குச் செல்லவும் நாம் அனைவரும் நம் பங்கைச் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

“KTV ஓய்வறைகள் மற்றும் ஜுராங் மீன் வர்த்தக துறைமுகம் ஆகியவற்றிலிருந்து அண்மையில் உருவான பெரிய குழுமம், நாம் அனைவரும் ஏன் தடுப்பூசி போட வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றன” என்றார் திரு. லீ.

மேலும் 12 சந்தைகள், உணவு நிலையங்களுடன் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்பு