மேலும் 12 சந்தைகள், உணவு நிலையங்களுடன் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்பு

new Covid-19 clusters form
(Photo: TODAY)

சிங்கப்பூர் முழுவதும் உள்ள மேலும் 12 சந்தைகள் மற்றும் உணவு நிலையங்களுடன் புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர்புள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) இன்று காலை (ஜூலை 18) தெரிவித்துள்ளது.

ஜுராங் மீன் வர்த்தக துறைமுகத்தில் மீன் விற்பனையாளர்களிடையே தொற்று அதிகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடல் உணவுகளை வாங்க பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – சிங்கப்பூர் உணவு அமைப்பு

கடந்த வெள்ளிக்கிழமை, துறைமுகம் மற்றும் ஹாங் லிம் சந்தை, உணவு நிலையத்தில் கிருமித்தொற்று குழுமம் உருவானது கண்டறியப்பட்டது.

மொத்த சந்தைகள், உணவு நிலையங்களின் தொற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை 13ஆக உள்ளது.

இந்நிலையில், கடல்வாழ் உணவுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) வலியுறுத்தியுள்ளது.

ஜூராங் மீன் வர்த்தக துறைமுகம் ஜூலை 31 வரை மூடப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பை SFA பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டவர்களுக்கு நற்செய்தி.!