சிங்கப்பூரில் இன, சமய ஒற்றுமை புதுப்பிக்கப்பட வேண்டும் – கலாச்சார, சமூக அமைச்சர்.!

Singapore minister Edwin Tong
Pic: Edwin Tong/FB

சிங்கப்பூரில் சமீப காலமாக இனவெறி கருத்துகளை கூறியதாகக் குற்றச்சாட்டுகள் அதிகளவில் வருகின்றன.

சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக கட்டுக்கோப்பில் இருந்த இன, சமய ஒற்றுமை தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என கலாச்சார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) கூறியுள்ளார்.

சில காலங்களாக, சிங்கப்பூரில் நடந்த சில இன ரீதியான சம்பவங்களை மேற்கொள்காட்டி அமைச்சர் இதனை கூறினார்.

இனவெறி கருத்துகளைக் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு $5,000 பிணை!

இன, சமய சகிப்புத்தன்மை என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி வந்த நாம், இனி சகிப்புத்தன்மை என்ற வார்த்தைக்குப் பதில், ஏற்றுக்கொள்ளுதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம் என அமைச்சர் தோங் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் இன, சமய விவகாரங்களில் புதிய சவால்களை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதுப்பிக்கப்பட்ட சீக்கிய கோயில் திறப்பு விழாவில் பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்பு!