தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் கா.சண்முகம் சந்திப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் கா.சண்முகம் சந்திப்பு!
Photo: TN GOVT

 

சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்வோரின் மனைவிகள் தான் டார்கெட் – வலையில் சிக்கும் பெண்கள்

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், இன்று (ஜன.11) மாலை 05.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் கா.சண்முகம் சந்திப்பு!
Photo: TN Govt

இந்த சந்திப்புக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்தை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அயலகத் தமிழர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், எனது கடைசி சிங்கப்பூர் பயணத்தின் போது விடுக்கப்பட்ட எனது அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொள்வதாக அவரது வருகை அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டு துணைத் தூதர் எட்கர் பாங்க் (Edgar Pang), உதவி இயக்குநர் ஷான் லிம் யங் சென், முதுநிலை மேலாளர் சுரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.