ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் அமைச்சர்கள்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் ஆகியோர் 13ஆவது சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டு கூட்டத்தில் (13th meeting of the Singapore- Australia Joint Ministerial Committee- ‘SAJMC’) கலந்துக் கொள்வதற்காக, மே 1- ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

லேப்டாப் சார்ஜருக்குள் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் (Canberra) நடைபெறும் கூட்டத்தில் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் (Deputy Prime Minister and Minister for Defence Richard Marles), வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் (Minister for Foreign Affairs Penny Wong), வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை, சிறப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் டான் ஃபாரெல் (Minister for Trade and Tourism and Special Minister of State Don Farrell) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிங்கப்பூரில் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்வு….வெளிநாட்டு ஊழியர்கள் அதிர்ச்சி!

இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கூட்டம், கடைசியாக கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.