பிரிட்டிஷ் முன்னாள் பிரதமரைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்கள்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேரை சிங்கப்பூர் அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.

சிங்கப்பூரில் மேலும் 1,931 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேரை (Former British Prime Minister Tony Blair) இன்று அமைச்சர்கள் சான் சுன் சிங் மற்றும் எட்வின் டோங் ஆகியோருடன் சந்திப்பதில் பெருமையடைகிறேன்.

வணிக ரீதியான பயணிகள் விமானங்கள்… இந்தியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை

உலகளாவிய மற்றும் பிராந்திய வளர்ச்சிகள் குறித்து நாங்கள் பரந்த அளவிலான மற்றும் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தினோம். உலகம் முழுவதும் திறந்த, உள்ளடக்கிய மற்றும் வளமான சமூகங்களை உருவாக்க உதவும் பிளேரின் லாப நோக்கமற்ற, உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேர் இன்ஸ்டிடியூட் பணியைப் பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவரை மீண்டும் விரைவில் சிங்கப்பூர் வருகை தர வரவேற்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.