“மியான்மரில் மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன”- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

மியான்மர் நிலைமை குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry of Foreign Affairs, Singapore) இன்று (01/02/2022) வெளியிட்டிருந்த அறிக்கையில், “மியான்மரில் ராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவடைகிறது. மியான்மரில் மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன.

சிங்கப்பூருக்கு வருங்காலமே இல்லையென்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூசிய சம்பவம் – இன்னைக்கும் “கெத்து” குறையாமல் நிற்கும் பின்னணி..!

மியான்மரின் நிலைமை குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த கவலையில் உள்ளது. மேலும் ஆசியான் ஐந்து அம்ச கருத்தைச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்திப்பதற்காக மியான்மருக்கு சிறப்புத் தூதுவரின் வருகையை எளிதாக்குவது உட்பட ஐந்து அம்ச ஒருமித்தக் கருத்தை விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்த மியான்மர் ராணுவ அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறைச் செயலாளர் சந்திப்பு!

யு வின் மியின்ட் (U Win Myint), ஆங் சான் சூகி (Daw Aung San Suu Kyi), மற்றும் வெளிநாட்டு கைதிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும், விடுவிக்கவும், மியான்மர் இராணுவ அதிகாரிகள் மியான்மரில் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமான நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், சிங்கப்பூர் அழைப்பு விடுக்கிறது. மியான்மரில் மனிதாபிமான சூழ்நிலையைத் தணிப்பதில் ஆசியானின் முயற்சிகளை ஆதரிப்பதில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.