சிங்கப்பூரில் பொருளாதாரத்துக்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பு தேவை..!

The trade organizations and trade groups have expressed concern that their contributions to the manufacturing, seafood and construction sectors are vital, while voices have emerged that their contributions should be curtailed after the COVID-19 sterilization.

சிங்கப்பூரில் உள்ள வர்த்தகக் குழுமங்களும் அமைப்புகளும், நாட்டின் பொருளியலுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்று ஒருமனதாக வலியுறுத்தி கூட்டறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.

COVID-19 கிருமித் தொற்றுக்குப்பிறகு அவர்களின் பங்களிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ள வேளையில் உற்பத்தி, கடல்துறை மற்றும் கட்டுமானம் துறைகளில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என வர்த்தக அமைப்புகளும், குழுமங்களும் கருத்துக்களை தெரிவித்ததுள்ளனர்.

இதையும் படிங்க: COVID-19 சர்க்யூட் பிரேக்கருக்குப் பிறகு வேலையிடங்களில் ஒன்றுகூடவேண்டாம்: மனிதவள அமைச்சகம்…

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களில் தூய்மை மற்றும் அதிக நெருக்கமாக தங்கியிருத்தல் போன்ற பல்வேறு விவகாரங்கள் கடந்த மாதம் எழுந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கிடையே கிருமித்தொற்று பன்மடங்கு அதிகரித்த பிறகு இந்த பிரச்னையை தீர்வுகாண அவர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என பரவலாக கருத்துக்கள் எழுந்ததாக கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட சிங்கப்பூர் இந்தியா, மலாய், சீன வர்த்தக தொழில் சபைகள் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் உள்ளூர் வாசிகள் பணியாற்ற விரும்பாத வேலைகளை வெளிநாட்டு ஊழியர்கள் செய்கிறார்கள், இதன் காரணமாக பெரும்பாலான சிங்கப்பூரர்கள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பவர்களாக வேலை செய்ய முடிகிறது.

ஆகவே வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தமான கொள்கைகள் என்று வரும்போது அரசாங்கமும், சிங்கப்பூரர்களும் மிக்க கவனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று வர்த்தக தொழில் சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிங்கப்பூரின் கட்டுமானத்துறை, கடல்துறை மற்றும் உற்பத்தித்துறை ஆகியவற்றின் முதுகெலும்பாக வெளிநாட்டு ஊழியர்கள் திகழ்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

COVID -19க்கு எதிரான போரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை மதித்தது அவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் இந்தியா வர்த்தக தொழில் சபையின் தலைவர் டாக்டர் டி சந்துரு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் இல்லாமல் சிங்கப்பூர் செயல்பட முடியாது என்று சிங்கப்பூர் குத்தகையாளர் சங்க தலைவர் திரு இங் யெக் மெங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் அடுத்த மாதம் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை…!