வேலை அனுமதிக்கான (work pass) புதிய விண்ணப்பங்கள் ஏற்பதை நிறுத்தும் சிங்கப்பூர்

(Photo: TODAY)

உலகெங்கிலும் பல இடங்களில் COVID-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வேலை அனுமதிக்கான (work pass) புதிய விண்ணப்பங்கள் ஏற்பதை சிங்கப்பூர் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடு முக்கிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்குத் தேவையான ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கிறது, அவர்கள் சிங்கப்பூர் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வளாகத்தில் கரப்பான் பூச்சிகள்… உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு

ஆஸ்திரேலியா, புருனே, சீனா, நியூசிலாந்து, தைவான், ஹாங்காங் மற்றும் மக்காவு தவிர அனைத்து இடங்களுக்கும் அது பொருந்தும்.

ஜூலை 5ஆம் தேதிக்கு முன்னர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி பெற்றவர்களுக்கும் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஜூன் 7ஆம் தேதிக்கு முன்னர் சிங்கப்பூர் வர திட்டமிட்ட சிலரைத் தவிர, முன்னதாக அனுமதி பெற்ற வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

அடுத்தடுத்த வாரங்களில் அவர்கள் பயணங்களை மாற்றியமைக்குமாறு MOM தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழல் சீராகும்போது, சிங்கப்பூருக்குள் நுழைய எப்போது மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை முதலாளிகளுக்கு MOM தெரிவிக்கும் என்று அது கூறியுள்ளது.

உணவக வளாகத்தில் கரப்பான் பூச்சிகள்… உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு