சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று: புதிதாக 956 பேர் பாதிப்பு – 692 பேருக்கு Omicron

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் சனிக்கிழமை (ஜனவரி 15) நிலவரப்படி, புதிதாக 956 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 552 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 404 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

நடைபாதை கூரையின் மீது விழுந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம்

மேலும், மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 843 ஆக உயர்ந்துள்ளது.

Omicron நோய்த்தொற்றுகள்

சிங்கப்பூரில் புதிதாக மொத்தம் 692 பேருக்கு Omicron நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் 541 பேர் உள்ளூர் அளவிலும், 151 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

நேற்று சனிக்கிழமை நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் 290,986 COVID-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் குடியிருப்புகளில் அதிக தொந்தரவு செய்யும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க எளிய வழிமுறைகள்..!