சிங்கப்பூரில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டது!

Coronavirus: 100 more people fined for not wearing masks in public

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த சில தினங்களாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000- ஐ கடந்திருந்தது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும், 60- வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர்.

“சிங்கப்பூர், திருச்சி இடையே கூடுதல் விமானச் சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியாதாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. மற்றொரு புறம், மருந்துக் கடைகளில் கொரோனா சுய பரிசோதனை கருவிகள் அதிகளவு விற்பனையாகியுள்ளது. சில இடங்களில் இக்கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா நிலவரம் குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (21/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (21/09/2021) ஒரே நாளில் 1,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து வந்த ஐந்து பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 1,038 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

தற்போது, 1,109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 147 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்ற 17 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் உள்ள ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு சிங்கப்பூரில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டிருந்தாலும் கூட, பொதுமக்கள் வெளியே செல்லும்போது, அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.