சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி!
Video Crop Image

 

சர்வதேச பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி 2023 (Singapore Open Badminton 2023), ஜூன் 6- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இந்த தொடரில், ஜப்பான், சீனா, இந்தியா, மலேசியா, தைவான், இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஊழியர்களை வேலை விட்டு நீக்கும் நிறுவனங்கள் – தொடரும் ஆட்குறைப்பு

ஜூன் 8- ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன தைபேவின் வீரர் சி.லீயை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே லீ அதிகம் செலுத்திய நிலையில், 21-15, 21-19 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரரை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியன்ஷு ரஜாவத் (Priyanshu Rajawat), ஜப்பான் வீரர் கோடாய் நராவ்காவை (K.Naraoka) எதிர்கொண்டார். இதில் அபாரமாக விளையாடிய ஜப்பான் வீரர், 21-17, 21-16 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரரை வீழ்த்தியுள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது, பேட்மிண்டன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.