சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடிகள் அதிர்ச்சி தோல்வி!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடிகள் அதிர்ச்சி தோல்வி!
Twitter Image

 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி 2023 (Singapore Open Badminton 2023), ஜூன் 6- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இந்த தொடரில், ஜப்பான், சீனா, இந்தியா, மலேசியா, தைவான், இந்தோனேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கேலாங் பகுதியில் அதிரடி சோதனை: முறையான உரிமம் இல்லை, வேலைவாய்ப்பு சட்டம் மீறல்… பிடிபட்ட 43 பேர்

ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜூன் 07) ஆண்கள் இரட்டையர் முதலாவது தகுதிச் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானைச் சேர்ந்த அகிரா- தாய்ச்சி சாய்டோ ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜப்பான் ஜோடி, இந்திய ஜோடியை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 18-21, 21-14, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஜாலி- கோபிசந்த் ஜோடி, 14-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் யங் நிகா டிங்- யங் புய் லாம் ஜோடியுடன் போராடி தோல்வி அடைந்தது.

முட்டைகள் மீது ரெஸ்ட் எடுக்கும் பெருச்சாளி – கேள்வி குறியாகும் பாதுகாப்பு… SFA தலையீடு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.