ஜொகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம்: மலேசியா – சிங்கப்பூர் தீவிர பேச்சுவார்த்தை..!

Singapore 'optimistic' RTS Link project discussions can be concluded by Jul 31 deadline: MOT
Singapore 'optimistic' RTS Link project discussions can be concluded by Jul 31 deadline: MOT (Image: LTA)

ஜொகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் (RTS) திட்டம் குறித்த விவாதங்களை இந்த மாத இறுதிக்குள் முடிக்க முடியும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் (MOT) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) தெரிவித்துள்ளது.

ஜொகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு திட்டம் குறித்து, மலேசியாவும் சிங்கப்பூரும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன என்று MOT கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தமிழக ஊழியர்கள்..!

மேலும் மலேசியாவைப் போலவே, நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை, ஜூலை 31 காலக்கெடுவிற்குள் முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று MOT செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது பற்றிய கூடுதல் விவரங்கள் முடிவு தேதிக்கு நெருக்கமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

RTS இணைப்பு திட்டம், 2024ஆம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும், ஆனால் திட்டத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான காலவரம்பு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூரின் முதல்வர் ஹஸ்னி முகமது, உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தற்போது பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்குக் காத்திருப்பதாகவும் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க : “சிங்கப்பூர் – இந்தியா நெருக்கமாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குறேன்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg