வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டத்தை முன்மொழிந்த உள்துறை அமைச்சகம்!

File Photo

 

வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமது நாட்டு குடிமக்களுக்கு ஜப்பான் அரசு அறிவுறுத்தல்!

இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறியதாவது, “பகைமையைத் தூண்டும் தகவல் இயக்கம் நடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்பட்டால், கருத்துகள் ஏதும் வெளியிடப்படுவதற்கு முன்பே, அது குறித்துத் தகவல் அளிக்கும்படி சமூக ஊடகங்களிடம் உத்தரவிட முடியும். செய்தித் தாள்களும் சமூக ஊடகங்களில் நடத்தப்படும் அத்தகைய இயக்கம் குறித்து அறிவிப்பு விடுப்பது கட்டாயமாக்கப்படலாம்.

வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான சட்டம், அரசியல் கருத்துகளை வெளியிடும் சிங்கப்பூரர்களுக்குப் பொருந்தாது. சிங்கப்பூரர்களுக்கு அரசியல் குறித்து கலந்துரையாட உரிமை உண்டு. இருப்பினும் அவர்கள் வெளிநாட்டைப் பிரதிநிதிப்பவர்களாக இருக்கக்கூடாது. சிங்கப்பூர் அரசியல் குறித்த கருத்துகளை அல்லது செய்தியை வெளியிடும் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. இனம், சமயம் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கொண்டு மக்களிடையே பகைமையை அல்லது பிளவை ஏற்படுத்தலாம். முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின்கீழ், சமூக ஊடக நிறுவனங்கள், இணைய உரையாடல் செயலிகள், இணையத்தளங்கள் போன்றவற்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்” எனத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் உண்மைக்கு மாறான தகவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களை முறைப்படுத்த வேண்டியது காலத்தில் கட்டாயம். சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்திருந்தப் போதிலும், சில நபர்களின் செயலால் அது ஆபத்தில் முடிகிறது.

எனவே, சமூக வலைத்தளங்களை முறைப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சமூக வலைத்தளங்களுக்கென்று சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை வகுத்து அமல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.