உலகின் அதிக “ஆற்றல் மிக்க” பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாம் இடம்..!

Singapore passport ranked 2nd most powerful in the world (Photo: The Straits Times )

சிங்கப்பூர் பாஸ்போர்ட் ஜப்பானுக்கு அடுத்தபடியாக உலகின் அதிக ஆற்றல் மிக்க பாஸ்போர்ட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது.

இந்த 2020 ஆம் ஆண்டில், ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் மற்றும் குளோபல் மொபிலிட்டி அறிக்கையில், ஜப்பான் முதலிடத்தைப் பிடித்த நிலையில், உலகின் மிக “ஆற்றல் மிக்க” பாஸ்போர்ட்களின் தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் விபத்து; 170 பேர் உயிரிழப்பு..!

உலக குறியீட்டு தரவரிசையில் முதல் மூன்று இடங்களை ஆசிய நாடுகள் பிடித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளன, தென் கொரியா மற்றும் ஜெர்மனி மூன்றாவது இடத்தில் உள்ளன.

ஜப்பான் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன் விசா விண்ணப்பிக்காமல் 191 நாடுகளுக்கும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம்.

தென் கொரியா, ஜெர்மனி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஈரான்- அமெரிக்கா போர் பதற்றம்; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முக்கிய அறிவிப்பு..!

இந்த Henley குறியீடு, உலக ஆகாயப் போக்குவரத்துச் சங்கம் (IATA) வழங்கும் தகவலின் அடிப்படையில் உருவாகிறது. இந்த ஆண்டு மொத்தம் 107 நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் தரவரிசை:

  1. ஜப்பான்
  2. சிங்கப்பூர்
  3. தென் கொரியா மற்றும் ஜெர்மனி
  4. இத்தாலி மற்றும் பின்லாந்து
  5. ஸ்பெயின், லக்சம்பர்க், டென்மார்க்
  6. ஸ்வீடன், பிரான்ஸ்
  7. சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா
  8. அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், நோர்வே, கிரீஸ், பெல்ஜியம்
  9. நியூசிலாந்து, மால்டா, செக் குடியரசு, கனடா, ஆஸ்திரேலியா
  10. ஸ்லோவாக்கியா, லிதுவேனியா, ஹங்கேரி
  11. ஸ்லோவேனியா, லாட்வியா, ஐஸ்லாந்து
  12. எஸ்டோனியா
  13. மலேசியா, லிச்சென்ஸ்டீன்