சிங்கப்பூர் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

Singapore Passport
(Photo: ANI/Twitter)

சிங்கப்பூர் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம், தற்போதைய ஐந்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (மே 7) தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமக்களுக்கு இந்த அதிகரிப்பு பொருந்தும்.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்திற்கு S$10,000 அபராதம்!

இந்த நடவடிக்கை பாஸ்போர்ட் புதுப்பித்தலின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்றும், சிங்கப்பூரர்களுக்கு அதிக வசதியை வழங்கும் என்றும் ICA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு, பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டண முறையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல S$70ஆக இருக்கும்.

குழந்தைகளின் முக அம்சங்கள் மிக விரைவாக மாற்றம் அடையும், ​​ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அவர்களின் பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பது மூலம் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை அடிக்கடி புதுப்பிக்க முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

“சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களின் தேவை முக்கியம்”