சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளை தளர்த்த அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; அமைச்சர் திரு வோங்.!

Roslan Rahman/AFP

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றை பொருத்தவரை, உருமாறும் கட்டத்தில் இருப்பதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறியுள்ளார்.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய இணையக் கலந்துரையாடலில் திரு வோங் இதனை தெரிவித்தார். மேலும், சிங்கப்பூர் புதிய இயல்பு நிலையை நோக்கிச் செல்ல தடுப்பூசி போடுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

COVID-19 தடுப்பூசி போடமல் இருப்பதால், கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகரிக்கலாம் – சுகாதார அமைச்சர் கவலை.!

கொரோனா உருமாறும் இந்த காலக்கட்டத்தில், கட்டுப்பாடுகள் தொடர்ந்து தேவைப்படுவதாக கூறிய அவர், சிங்கப்பூரில் இன்னும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார்.

மேலும், சிங்கப்பூர் சிறிய மற்றும் திறந்த பொருளியலாக இருப்பதால் அது உலகத்துடன் பாதுகாப்பாக மீண்டும் இணைய வேண்டும் என்றும், எல்லைகளை கட்டம் கட்டமாக திறப்பதன் மூலம் அது சாத்தியமாகும் என்றும் அமைச்சர் திரு வோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் விகிதம் அதிகரிப்பதால், அரசாங்கம் எல்லைகளை மீண்டும் திறக்கவேண்டும் என வர்த்தகச் சம்மேளனம் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்றோர் கேட்டுக்கொண்டனர்.

சிங்கப்பூரில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.!