காவல்துறை அதிரடி; சந்தேக நபர்கள் 244 பேர் மீது விசாரணை!

File Photo : Singapore Police

சிங்கப்பூரில் பிப்ரவரி 11ம் தேதி முதல் 24ம் வரை நாடு முழுவதும் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 244 நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இவர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் மோசடி சம்பவங்களில் சிக்கியவர்கள் மொத்தம் சுமார் 4.3 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 244 நபர்களில், 167 ஆண்களும் மற்றும் 77 பெண்களும் அடங்குவர். இவர்கள் 15 முதல் 77 வயதுக்கு உட்பட்டவர்கள்.

160 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் “பிரம்பில்” ஆன்டிசெஃப்டிக்.. நான்கு அடிக்கே மயங்கிச் சரிந்துவிடுவார்கள் – சிங்கப்பூர் பிரம்படி எப்படி இருக்கும்? | Caning in Singapore

இணைய காதல் மோசடிகள், மின்வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள், அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்றும் மோசடிகள் உள்ளிட்ட 510-க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக சொல்லப்படும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 5,00,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் மோசடிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 1800-722-688 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது scamalert.sg/ என்ற இணையத்தை நாடலாம்.

இதுபோன்ற மோசடிகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற அவசர தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம். தகவல்கள் அனைத்தும் கண்டிப்பாக ரகசியம் காக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை