சிங்கப்பூர் காவல் படை பொதுமக்களுக்கு எச்சரிக்கை – தெரியாத அழைப்புகள் மூலம் தொடர்புகொண்டு நிதி மோசடியில் ஈடுபடும் கும்பல்

சிங்கப்பூர் காவல் படை வியாழக்கிழமை அன்று (May 12) பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியது. மோசடி செய்பவர்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு நண்பர்கள் போல பேசி, ஏமாற்றி பணத்தை மோசடி செய்கின்றனர்.

இந்த மோசடி விவகாரம் குறித்து SPF May 12 அன்று செய்தி அறிக்கை வெளியிட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சுமார் 587 பேர் மோசடியால் பாதிப்படைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மோசடி செய்யப்பட்டவர்களிடமிருந்து $2.7 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஏமாற்றப்பட்டுள்ளது.2022 ,மே மாதத்தில் மட்டும் 43 பேர் ,மோசடி செய்பவர்களிடம் S$177000 வரை இழந்துள்ளனர்.மோசடி செய்பவர்கள் “+” என்ற முன்னொட்டுடன் தொடங்கும் தெரியாத எண்கள் மூலம் தொடர்பு கொள்வார்கள்.

அவர்களின் அழைப்பிற்கு பதிலளிக்கும்போது மோசடி செய்பவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஏமாற்ற பட்டவர்களின் மிகவும் பழக்கமான நண்பரின் பெயரை தெரிவிப்பார்கள் என்று SPF தெரிவித்தது.

தொலைபேசியை தொலைத்து விட்டதாகவும் அல்லது தொலைபேசி எண்ணை மாற்றி விட்டதாகவும் கூறி உரையாட தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
சிலநாட்கள் பழக்கத்திற்கு பிறகு நிதி சிக்கல்களை காரணம் காட்டி கடனாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் உண்மையான நண்பரை தொடர்பு கொண்ட பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை கண்டுபிடிப்பார்கள் என்று SPF தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளிலிருந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு SPF எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று பல்வேறு வகையான மோசடிகளை பற்றி அறிய www.scamalert.sg-ஐ உபயோகிக்கலாம் என்று தெரிவித்தது.