சிங்கப்பூரில் இந்த வார இறுதியில் தொடர்ச்சியான மழை எதிர்பார்ப்பு

Singapore rainy weather persists
(Photo: Ooi Boon Keong)

சிங்கப்பூரில் இந்த வார இறுதியில் குளிர் மற்றும் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 20,000 நிறுவனங்களுக்கு S$17.4 பில்லியன் வர்த்தக கடன்…

நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 8) பேஸ்புக் பதிவில், தொடர்ந்து மழை பெய்யும் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) தெரிவித்துள்ளது.

மேலும், பரவலான மற்றும் சில நேரங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அது தெரிவித்துள்ளது.

சில இடங்களில் தினசரி வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

கடந்த வாரம், இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழைக்குப் பிறகு, இந்த மாதத்தின் இரண்டாவது பருவமழை இதுவாகும் என்று NEA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் நவம்பரில் முதன்முறையாக வீழ்ச்சி!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…