சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் நவம்பரில் முதன்முறையாக வீழ்ச்சி!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் முதன்முறையாக வீழ்ச்சியடைந்தது.

இது COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஊழியரணி எதிர்நோக்கிய மிக மோசமான சவால்கள் தணிந்திருக்க கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.

காரின் மீது மோதி பறந்து சாலையில் விழும் உணவு விநியோக பைக் ஓட்டுநர்

கடந்த நவம்பரில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.3 சதவீதமாக இருந்தது, அக்டோபரில் பதிவான 3.6 சதவீதத்திலிருந்து அது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளிடையே வேலையின்மை விகிதம், அக்டோபரில் 4.8 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 4.6 சதவீதமாகக் குறைந்தது.

குடிமக்களின் வேலையின்மை விகிதத்தைப் பொறுத்தவரை, அக்டோபரில் 4.9 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 4.7 சதவீதமாகக் குறைந்தது.

COVID-19 சூழல் உருவாவதற்கு முன்பு, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.0 சதவீதமாக இருந்தது, இது 2018 முதலாம் காலாண்டில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.

சிங்கப்பூரில் இளைஞர் ஒருவருக்கு வெட்டு…சந்தேக நபர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…