சிங்கப்பூரில் சுமார் 20,000 நிறுவனங்களுக்கு S$17.4 பில்லியன் வர்த்தக கடன்…

COVID-19 business loans Enterprise Singapore
(PHOTO: Reuters)

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (Enterprise Singapore -ESG) அமைப்பு கடந்த ஆண்டு மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் ஆதரிப்பு திட்டங்களின் கீழ் சுமார் S$17.4 பில்லியன் வர்த்தக கடன்கள் வழங்கியுள்ளது.

அதாவது சுமார் 20,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அந்த வர்த்தக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் நவம்பரில் முதன்முறையாக வீழ்ச்சி!

இந்த COVID-19 நெருக்கடியால் முன்வைக்கப்பட்ட சவால்களை சமாளிக்க இதுபோன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டதாக ESG கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டில் ESG ஆதரவு கடன்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் S$1.3 பில்லியன் உதவியை விட இது 13 மடங்கு அதிகமாகும் என்று ​​வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) வெள்ளிக்கிழமை (ஜன. 8) தெரிவித்தார்.

COVID-19 பரவலின் போது நீட்டிக்கப்பட்ட கடன்கள், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகின்றன, மேலும் அவை நிறுவனங்களின் திறன்களை தக்கவைத்துக்கொள்வதையும் உறுதிசெய்கின்றன என்றும் திரு சான் கூறினார்.

சிங்கப்பூர் மொத்த வர்த்தகத் துறையில் 320,000க்கும் அதிகமான வேலைகளைக் கொண்டுள்ளது. இந்தத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அது 12 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.

காரின் மீது மோதி பறந்து சாலையில் விழும் உணவு விநியோக பைக் ஓட்டுநர்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…